2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

சோதனையில் நொர்கியா, நரைனின் துடுப்புமட்டைகள் தோல்வி

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 16 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பஞ்சாப் கிங்ஸுக்கெதிரான புதன்கிழமை (15) போட்டியின்போது கொல்கத்தா நைட் றைடர்ஸின் அன்றிச் நொர்கியா துடுப்புமட்டையை மாற்ற வேண்டியேற்பட்டுள்ளது.

போட்டி நடுவர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது துடுப்புமட்டை தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை நை றைடர்ஸின் இனிங்ஸ் ஆரம்பிக்க முன்னர் சுனில் நரைனின் துடுப்புமட்டையும் தோல்வியடைந்தமை காணொளியொன்றில் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (13) முதலே களத்தில் துடுப்புமட்டைகளின் அளவுப்பிரமானங்களை நடுவர்கள் சோதிக்க ஆரம்பித்திருந்த நிலையில் இதுவே துடுப்பாட்டவீரர்கள் துடுப்புமட்டையை மாற்றவேண்டியேற்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X