2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

சீன குரான் பிறீ: வென்றார் பியாஸ்திரி

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 23 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீன குரான் பிறீயானது ஷங்காயில் ஞாயிற்றுக்கிழம்ஜை (23) நடைபெற்றபோது மக்லரென் அணியின் ஒஸ்கார் பியாஸ்திரி வென்றார்.

பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த அவுஸ்திரேலியாவின் பியாஸ்திரி வென்ற நிலையில், பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த பியாஸ்திரியின் சக மக்லரன் அணி ஓட்டுநரான லான்டோ நொரிஸ் இரண்டாமிடத்தைப் பெற்றார். பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் ஜோர்ஜ் ரஸல் மூன்றாமிடத்தைப் பெற்றார்.

இவ்வாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 44 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பிரித்தானியாவின் நொரிஸ் காணப்படுகின்றார். 36 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் காணப்படுவதோடு, 35 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பிரித்தானியாவின் ரஸல் காணப்படுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X