2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

சிம்பாப்வேயைத் தோற்கடித்த இந்தியா

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 08 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்தியா வென்ற நிலையில், ஹராரேயில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ஷுப்மன் கில் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, அபிஷேக் ஷர்மாவின் 100 (47), ருத்துராஜ் கைகவாட்டின் ஆட்டமிழக்காத 77 (47), ரிங்கு சிங்கின் ஆட்டமிழக்காத 48 (22) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 234 ஓட்டங்களைப் குவித்தது. பந்துவீச்சில் பிளஸிங் முஸர்பனி 4-1-30-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.

பதிலுக்கு 235 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, முகேஷ் குமார் (3). ஆவேஷ் கான் (3), வொஷிங்டன் சுதர், ரவி பிஷ்னோயிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களையே பெற்று 100 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக அபிஷேக் ஷர்மா தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .