2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்ட லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 12 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வெளியேற்றப்பட்டுள்ளது.

பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் தோற்றே தொடரிலிருந்து லிவர்பூல் வெளியேற்றப்பட்டுள்ளது.

பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றிருந்த நிலையில், புதன்கிழமை (12) அதிகாலை தமது மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் பின்னடைவை போட்டியின் வழமையான நேர முடிவில் சந்திக்க மொத்த கோல் எண்ணிக்கை 1-1 என சமனானது.

மேலதிக நேரத்திலும் கோலெதுவும் பெறப்படாத நிலையில், பெனால்டியில் 1-4 என்ற ரீதியில் தோற்றே தொடரிலிருந்து லிவர்பூல் வெளியேறியிருந்தது.

லிவர்பூலின் டர்வின் நுனேஸ், கேர்ட்டிஸ் ஜோன்ஸின் உதைகளை பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி டொன்னருமா தடுக்க, பரிஸ் ஸா ஜெர்மைனின் வித்தின்ஹா, கொன்கலோ றாமோஸ், உஸ்மான் டெம்பிலி, டிஸயர் டூக்கோரே தமதுதைகளை உட்செலுத்தியிருந்தனர். லிவர்பூலின் மொஹமட் சாலா தனதுதையை உட்செலுத்தியிருந்தார்.

இதேவேளை சக புண்டெலிஸ்கா கழகமான பயெர் லெவர்குசனை வென்ற பயேர்ண் மியூனிச் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற மியூனிச், லெவர்குசனின் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று 5-0 என்ற மொத்த கோல் கணக்கில் வென்றது. மியூனிச் சார்பாக ஹரி கேன், அல்போன்ஸோ டேவிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .