2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

சம்பியன்ஸ் கிண்ணம்: வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான், பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 25 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து தொடரை நடாத்தும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் வெளியேற்றப்பட்டுள்ளன.

ராவல்பின்டியில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற பங்களாதேஷுடனான குழு ஏ போட்டியை நியூசிலாந்து வென்றமையைத் தொடர்ந்தே தொடரிலிருந்து பாகிஸ்தானும், பங்களாதேஷும் வெளியேற்றப்பட்டுள்ளன.

குழு ஏயில் நியூசிலாந்து, இந்தியாவிடம் ஏற்கெனவே பாகிஸ்தான் தோற்றதுடன், இந்தியாவுடன் பங்களாதேஷ் ஏற்கெனவே தோற்ற நிலையிலேயே தொடரிலிருந்து பாகிஸ்தானும், பங்களாதேஷும் இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே வெளியேற்றப்பட்டுள்ளன.

மறுபக்கமாக தமக்கிடையேயான போட்டிக்கு முன்பதாகவே மற்றைய இரண்டு போட்டிகளிலும் வென்றதுடன், ஏனைய இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தளுவிய நிலையில் நியூசிலாந்தும், இந்தியாவும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ், மிற்செல் பிறேஸ்வெல் (4), வில் ஓ ருர்க் (2), மற் ஹென்றி, கைல் ஜேமிஸனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 77 (110), ஜாகிர் அலி 45 (55) ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு 237 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, றஷின் றவீந்திரவின் 112 (105), டொம் லேதமின் 55 (76) ஓட்டங்களோடு 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், தஸ்கின் அஹ்மட், நஹிட் ரானா, முஸ்தபிசூர் ரஹ்மான், ரிஷாட் ஹொஸைன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக பிறேஸ்வெல் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X