Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மார்ச் 02 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்ற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானை தென்னாபிரிக்கா வென்றதுடன், அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், கராச்சியில் சனிக்கிழமை (01) நடைபெற்ற
இங்கிலாந்துடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே குழு பியில் ஐந்து புள்ளிகளுடன் முதல்நிலை அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, மார்கோ ஜன்சன் (3), கேஷவ் மஹராஜ் (2), வியான் முல்டர் (3), ககிஸோ றபாடா, லுங்கி என்கிடியிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 38.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 37 (44), ஜொஃப்ரா ஆர்ச்சர் 25 (31) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 180 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, றஸி வான் டர் டுஸனின் ஆட்டமிழக்காத 72 (87), ஹெய்ன்றிச் கிளாசென்னின் 64 (56) ஓட்டங்களோடு 29.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் ஜொஃப்ரா ஆர்ச்சர் 2, அடில் ரஷீட் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ஜன்சன் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago