2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

சம்பியன்ஸ் கிண்ணத்திலிருந்து கார்ஸ் வெளியேற்றம்

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து பிறைடன் கார்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இடது பெருவிரல் காயம் காரணமாக இங்கிலாந்தின் பயிற்சியை திங்கட்கிழமை (24) கார்ஸ் தவறவிட்டிருந்தார்.

கார்ஸ் தொடரிலிருந்து வெளியேறுவது சர்வதேச கிரிக்கெட் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டமையையடுத்து, சுழற்பந்துவீச்சாளர் றெஹான் அஹ்மட் குழாமுக்கு கார்ஸின் இடத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அணியில் கார்ஸை ஜேமி ஒவெர்ட்டன் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X