2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சம்பியனான பிளைங் ஹோர்ஸ்

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 29 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம். ஸாகிர்

நிந்தவூர் எமாறெல்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், "எமாறெல்ட் சம்பியன் கிண்ணம் - 2024" என்ற நாமத்தில் நடாத்திய மென்பந்தாட்டத் தொடரில் சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் சம்பியனானது.

அம்பாறை மாவட்டத்தின் பலம் வாய்ந்த 24 முன்னணிக்கழகங்களையிணைத்து அணிக்கு எட்டு வீரர்கள், 5 ஓவர்கள் என்ற அமைப்பில் நிந்தவூர் பொது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) நடாத்திய இத்தொடரின் இறுதிப் போட்டியில் நிந்தவூர் ஹிக்மா விளையாட்டுக் கழகத்தை வென்றே பிளைங் ஹோர்ஸ் சம்பியனானது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஹிக்மா  முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் (20 பந்துகள்) 3 விக்கெட்டுகளை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 42 ஓட்டங்கள்  என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பிளையிங் ஹோர்ஸ், ஒரு விக்கெட்டை மாத்திரமேயிழந்து 17 பந்துகளில் மூன்று பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகளால் வென்று கிண்ணத்தையும், 25,000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றுக் கொண்டனர்.

இவ்விறுதிப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகவும் பிளையிங் ஹோர்ஸின் ஆஷிம், சிறந்த துடுப்பாட்ட வீரராக ஸாஜித் ஆகியோர் தெரிவாகினர்.

இத்தொடரில் மூன்றாமிடத்தை நிந்தவூர் லகான் அணி பெற்றுக் கொண்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .