2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

“சச்சினை நியமியுங்கள்”

Editorial   / 2024 நவம்பர் 14 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கரை இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) முன்னாள் வீரர் டபிள்யு.வி.ராமன் வலியுறுத்தியுள்ளார்.

“பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு பேட்டிங் ஆலோசகராக டெண்டுல்கரின் ஆலோசனைகள் கிடைத்தால் பெரிய பலன் பெறலாம். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நீண்ட நேரம் உள்ளது. அதோடு இப்போது அணியில் ஆலோசகரை சேர்ப்பது வழக்கமான ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது” என எக்ஸ் தள பதிவில் டபிள்யு.வி.ராமன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் டெண்டுல்கர். அங்கு 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 1809 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் ஆறு சதங்கள் அடங்கும். ஆஸ்திரேலியாவில் அவரது சராசரி 53.20 ஆக உள்ளது. 1991 முதல் 2013 வரையில் சச்சின் அங்கு விளையாடி உள்ளார். கடந்த 2003-ல் சிட்னி மைதானத்தில் 241* ஓட்டங்களை அவர் எடுத்திருந்தார்.

அண்மையில் சொந்த நாட்டில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்த இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனைகள் பெரிதும் உதவும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X