2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

சங்காவின் சதத்தோடு இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 11 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், ரய்ப்பூரில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து, டில்ருவான் பெரேரா, அசேல குணரட்ண, இசுரு உதான, ஜீவன் மென்டிஸ், சத்துரங்க டி சில்வாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் பில் மஸ்டார்ட் 50 (39) ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு147 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, அணித்தலைவர் குமார் சங்கக்காரவின் ஆட்டமிழக்காத 106 (47) ஓட்டங்களோடு 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக சங்கக்கார தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X