2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கோலியின் மாபெரும் சாதனையை சமன் செய்த சூர்யகுமார்

Editorial   / 2024 ஜூலை 28 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை குவித்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ஓட்டங்ள் எடுத்தார் இதையடுத்து 214 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வாங்கியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார் அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய வீரர் என்ற விராட் கோலியின் (16 முறை) சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X