2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

கோப்பா அமெரிக்கா: வெளியேற்றப்பட்ட பிரேஸில்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 08 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்று வரும் தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன கோப்பா அமெரிக்கா தொடரிலிருந்து பிரேஸில் வெளியேற்றப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற உருகுவேயுடனான காலிறுதிப் போட்டியில் பெனால்டியில் 2-4 என்ற ரீதியில் தோற்றே தொடரிலிருந்து பிரேஸில் வெளியேற்றப்பட்டது.

இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், பிரேஸிலின் ஈடர் மிலிட்டாவோவின் பெனால்டியை உருகுவேயின் கோல் காப்பாளர் சேர்ஜியோ றொச்ட் தடுத்ததுடன், டக்ளஸ் லூயிஸின் பெனால்டியானது கோல் கம்பத்தில் பட்டு வெளியில் சென்றிருந்தது. உருகுவேயின் ஜொஸே கிமென்ஸின் பெனால்டியை பிரேஸிலின் கோல் காப்பாளர் அலிஸன் பெக்கர் தடுத்தபோதும் மனுவல் உகர்டே தனது பெனால்டியை உட்செலுத்த 4-2 என்ற ரீதியில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு உருகுவே தகுதி பெற்றது.

உருகுவேயின் பெடெரிக்கோ வல்வர்டே, றொட்றிகோ பென்டாக்கூர், குளோர்ஜியன் டி அர்ரகயெட்டா ஆகியோரும் பிரேஸிலின் அன்ட்ரியாஸ் பெரைரா, கப்ரியல் மார்டினெல்லியும் தமது பெனால்டிகளௌ உட்செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .