2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

காரைதீவு கண்ணகியின் விளையாட்டுப் போட்டி

Editorial   / 2025 மார்ச் 09 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வி.ரி.சகாதேவராஜா
 
 காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய 65 வருட கால சரித்திரத்தில், முதலாவது  இல்ல விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை (08) வித்தியாலய அதிபர் சீ.திருக்குமார் தலைமையில் விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 
பிரதம அதிதியாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம் எச் எம்.ஜாபீர் கலந்து சிறப்பித்தார்.
 
கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன், பிரதிக் கல்விப் பணிப்பாளரும் காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளருமான ஆ.சஞ்சீவன் , ஓய்வு நிலை காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஜே.டேவிட், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட அதிபர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
 
ஆன்மீக அதிதியாக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் கலந்து சிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X