Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
மட்டக்களப்பு - கல்குடா டைவர்ஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்த நீச்சல் பயிற்சி நிகழ்வு காயாங்கேணி கடற்கரையில் சனிக்கிழமை (24) இடம்பெற்றது.
ஶ்ரீலங்கா லைப் காட்டின் வழிகாட்டலுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இலவச நீச்சல் பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை, அமைப்பின் ஏற்பாட்டாளர்களும் சமூக சேவை உதவியாளர்களுமான ஏ.சீ.எம். நியாஸ் ஹாஜியார், தொழிலதிபர் ஹிப்ஜாத் மற்றும் ஜௌபர் மெக்கானிக் ஆகியோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் “கல்குடா டைவர்ஸ்” அணியின் விஷேட சுழியோடி அப்துல் மஜீத் ஹலீம், கலந்து கொண்டவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளை வழங்கினார்.
பங்குபற்றிய அனைவருக்கும் நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம் அதனால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.
இப்பிரதேசத்தில் இடம்பெறும் நீர் அனர்த்தங்களின் போது நீரில் மூழ்குபவர்களை மீட்கும் பணிகளை கல்குடா டைவர்ஸ் அணியினர் களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலங்களில் இன்னும் சிறப்பான முறையில் அதிகமான இளைஞர்களுக்கு நீச்சல் மற்றும் உயிர்காக்கும் பயிற்சி நெறிகளை வழங்கவுள்ளதாகவும் இவ்வமைப்பினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago