2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

”கபில்தேவை கொல்ல முயன்றேன்”

Editorial   / 2025 ஜனவரி 14 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தவர் யுவராஜ் சிங். இவரது தந்தை யோக்ராஜ் சிங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான். இந்திய அணிக்காக விளையாடியவர்.

இந்நிலையில் யோக்ராஜ் சிங்   கூறியதாவது: கபில்தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அதே நேரத்தில் வடக்கு மண்டலம், ஹரியானா அணியின் கேப்டனாகவும் அவர் இருந்தார். அப்போது எந்தவித காரணமும் இல்லாமல் அணியில் இருந்து என்னை நீக்கினார். இதையடுத்து கபில்தேவுக்கு நான் பாடம் கற்பிப்பேன் என்று எனது மனைவியிடம் கூறினேன். உடனடியாக என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கபில்தேவ் வீட்டுக்கு சென்றேன். அப்போது கபில், அவரது அம்மாவுடன் வெளியே வந்தார்.

அப்போது கபில்தேவை திட்டி தீர்த்தேன். உன் தலையில் சுடுவதற்காக துப்பாக்கியை எடுத்து வந்தேன். ஆனால் உனக்கு பாசமான அம்மா இருக்கிறார். இதனால் உன்னை சுடவில்லை என்று கூறினேன். பின்னர் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று முடிவு எடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .