2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

ஓய்வு பெறும் கிறிஸ்டினாடோ ரொனால்டோ?

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 17 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வு நடைபெற வேண்டுமானால் அது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் நடைபெற வேண்டுமென போர்த்துக்கல்லின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில் போலந்தை 5-1 என்ற கோல் கணக்கில் சனிக்கிழமை (16) போர்த்துக்கல் வென்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பின்னரே இக்கருத்தை ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளார்.

இப்போட்டியில் 2 கோல்களைப் பெற்ற ரொனால்டோ தனது 132ஆவது வெற்றியை போர்த்துக்கல்லுக்காக பெற்ற நிலையில், ஸ்பெய்னுக்காக 131 போட்டிகளில் வென்ற சேர்ஜியோ றாமோஸின் அதிக சர்வதேசப் போட்டிகளில் வென்ற சாதனையை முறியடித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X