Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 நவம்பர் 24 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக டி சர்ட் அணிந்து வந்து கைதான நபர் யார்? அவரது பெயர் என்ன? போன்ற விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19ஆம் திகதி நடைபெற்றது.
இதில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றி எந்த அளவுக்கு பேசுபொருளானதோ, அதற்கு இணையாக ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்து உள்ளார் ஒரு பாலஸ்தீன் ஆதரவாளர்.
முதன் இன்னிங்சில் இந்தியா துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருந்தது. களத்தில் 14 ஆவது ஓவரின்போது விராட் கோலியும் கே.எல்.ராகுலும் துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருந்தனர்.
அப்போது இளைஞன் ஒருவன் திடீரென மைதானத்திற்கு உள்ளே நுழைந்தார். பிட்ச் அருகே ஓடிப்போய் விராட் கோலியின் தோள் மீது கைபோட்டு கையணைக்க முயன்றார்.
அவரது டீ சர்ட்டின் முன் பகுதியில் "பாலஸ்தீன் மீது குண்டு போடாதீர்கள்" என்றும், "பாலஸ்தீனை பாதுகாத்திடுங்கள்" என பின் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. முகத்தில் பாலஸ்தீன் கொடியை கட்டி இருந்தார். கையில் LGBTQவின் வானவில் கொடியும் இருந்தது. இவரது செயலால் சில நிமிடங்கள் போட்டியே நின்றது.
அவரை அங்கு வந்த பாதுகாவலர்களும் பொலிஸாரும் மைதானத்தை விட்டே அப்புறப்படுத்தினர். மைதானத்துக்குள் நுழைந்ததற்காக அவரை பொலிஸார் கைது செய்து உள்ளார்கள். சிவப்பு நிற கால் சட்டை அணிந்து முகத்தை மூடிக்கொண்டு நுழைந்த இவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்? பெயர் என்ன? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
அவரை கைது செய்யும் சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது பெயர் ஜான். நான் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவன். விராட் கோலியை சந்திப்பதற்காகவே நான் மைதானத்திற்கு உள்ளே சென்றேன். நான் பாலஸ்தீனை ஆதரிக்கிறேன்." என்றார்.
அந்த இளைஞரை கைது செய்த குஜராத் பொலிஸார், சந்த்கேதா காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லும்போது எடுத்த வீடியோவில் அவரது முகமும் தெளிவாக பதிவாகி உள்ளது.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞரின் முழு பெயர் வென் ஜான்சன் என்பது தெரியவந்தது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த அந்த இளைஞர் சீன - பிலிப்பைன் மரபை சேர்ந்தவராவார். ஹமாஸ் உடனான போரில் பாலஸ்தீனின் காசா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதை நிறுத்தக்கோரி இவ்வாறு செய்தததாக தெரிவித்து உள்ளார்.
அத்துமீறி நுழைதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குஜராத் பொலிஸ் அந்த இளைஞனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து உள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, விளையாட்டு போட்டிகளின்போது அரசியல் சார்ந்த போராட்டங்களுக்கு தடை உள்ளது. அதை மீறி இந்த சம்பவம் நடந்து உள்ளது.
இதற்கு முன் ரசிக மனப்பான்மையில் பலர் உள்ளே நுழைந்து இருந்தாலும், சர்வதேச பிரச்சனை தொடர்பான டீ சர்ட் அணிந்து ஜான்சன் உள்ளே நுழைந்தது கூடுதல் கவனத்தை ஈர்த்து உள்ளது. அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்பது பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago