2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

ஐக்கிய அமெரிக்க குரான் பிறீ: வென்ற லெக்கலெர்க்

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 21 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க குரான் பிறீயில் பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் வென்றுள்ளார்.

திங்கட்கிழமை (21) நடைபெற்ற இப்பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்து மொனாக்கோவின் லெக்கலெர்க் வென்றதுடன், அவரது சக பெராரி அணி வீரரான கார்லோஸ் சைன்ஸ் ஜூனியர் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் மூன்றாமிடத்தைப் பெற்றார்.

பந்தயம் முடிவடைய நான்கு சுற்றுக்கள் இருக்கத்தக்கதாக றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பனை மக்லரென் அணியின் லான்டோ நொரிஸ் முந்தியபோதும், சுற்றுப்பாதையின் வெளியே சென்றமையால் அவர் நான்காமிடத்துக்கு தரமிறக்கப்பட்டிருந்தார்.

இவ்வாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் 354 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகின்றார். 297 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பிரித்தானியாவின் நொரிஸும், 275 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெக்கலெர்க்கும் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X