Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2024 மே 19 , மு.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெற நடப்புச் சம்பியன்களான சென்னை சுப்பர் கிங்ஸ் தவறியுள்ளது.
பெங்களூருவில் சனிக்கிழமை (18) நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிகளுக்கு சென்னை தகுதி பெறத் தவற, பெங்களூரு தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டி முடிவில் பெங்களூர், சென்னை, டெல்லி கப்பிட்டல்ஸ், லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் ஆகியன 14 போட்டிகளில் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், ஓட்ட விகித அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் நான்காமிடத்தைப் பெற்றே தகுதிகாண் போட்டிகளுக்கு பெங்களூரு தகுதி பெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சென்னையின் அணித்தலைவர் ருத்துராஜ் கைகவாட், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு, அணித்தலைவர் பப் டு பிளெஸியின் 54 (39), விராட் கோலியின் 47 (29), ரஜாட் பட்டிடாரின் 41 (23), கமரன் கிறீனின் ஆட்டமிழக்காத 38 (17), கிளென் மக்ஸ்வெல்லின் 16 (05), தினேஷ் கார்த்திக்கின் 14 (06) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மிற்செல் சான்ட்னெர் 4-0-23-1, மகேஷ் தீக்ஷன 4-0-25-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 219 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்னை, தமது இனிங்ஸின் முதலாவது பந்திலேயே கைகவாட்டை கிளென் மக்ஸ்வெல்லிடம் இழந்தது. பின்னர் மூன்றாவது ஓவரில் டரைல் மிற்செலை யஷ் தயாலிடம் பறிகொடுத்தது.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த றஷின் றவீந்திர, அஜின்கியா ரஹானே வேகமாக ஓட்டங்களைச் சேகரித்த நிலையில் ரஹானே 33 (22) ஓட்டங்களுடன் பெர்கியூசனிடம் வீழ்ந்ததுடன், 61 (37) ஓட்டங்களுடன் றவீந்திர ரண் அவுட்டானார். தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் தீக்ஷனவுக்குப் பதிலாக தாக்கம் செலுத்தும் மாற்றுவீரராகக் களமிறங்கிய ஷிவம் டுபே, சான்ட்னெர் ஆகியோர் கிறீன், மொஹமட் சிராஜ்ஜிடம் வீழ்ந்தனர்.
இறுதியில் இரவீந்திர ஜடேஜாவும், மகேந்திர சிங் டோணியும் போராடியபோதும் இறுதி ஓவரில் 25 (13) ஓட்டங்களுடன் டோணி தயாலிடம் விழ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களையே பெற்ற சென்னை 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 44 (22) ஓட்டங்களைப் பெற்றார்.
இப்போட்டியின் நாயகனாக டு பிளெஸி தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
40 minute ago
45 minute ago
59 minute ago