Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 நவம்பர் 25 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் விலையுயர்ந்த வீரராக றிஷப் பண்ட் மாறியுள்ளார்.
சவுதி அரேபியாவின் ஜெடாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றழ் 2025ஆம் ஆண்டுக்கான தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் முதல் நாளில் 27 கோடி இந்திய ரூபாய்களுக்கு பண்டை லக்னோ சுப்பர் ஜையன்ட் வாங்கியுள்ளது.
இதற்கடுத்ததாக 26.75 கோடி இந்திய ரூபாய்களுக்கு ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் கைச்சாத்திட்டுள்ளது.
இதேவேளை 23.75 கோடி இந்திய ரூபாய்களுக்கு வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா நைட் றைடர்ஸ் மீளக் கைச்சாத்திட்டுள்ளது.
இதுதவிர 18 கோடி இந்திய ரூபாய்களுக்கு அர்ஷ்டீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் மீளக் கைச்சாத்திட்டதுடன், யுஸ்வேந்திர சஹாலையும் 18 கோடி இந்திய ரூபாய்களுக்கு வாங்கியுள்ளது.
வெளிநாட்டு வீரர்களில் 15.75 கோடி இந்திய ரூபாய்களுக்கு இங்கிலாந்தின் ஜொஸ் பட்லரை குஜராத் டைட்டான்ஸ் கைச்சாத்திட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் வனிது ஹசரங்கவை 5.25 கோடி இந்திய ரூபாய்களுக்கும், மகேஷ் தீக்ஷனவை 4.40 கோடி இந்திய ரூபாய்களுக்கும் ராஜஸ்தான் றோயல்ஸ் வாங்கியுள்ளது.
இந்நிலையில் இரவிச்சந்திரன் அஷ்வினை 9.75 கோடி இந்திய ரூபாய்களுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் கைச்சாத்திட்டிருந்தது.
தவிர அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க்கை 11.75 கோடி இந்திய ரூபாய்களுக்கு டெல்லி கப்பிட்டல்ஸ் கைச்சாத்திட்டிருந்தது.
இதேவேளை மொஹமட் சிராஜ்ஜை 12.25 கோடி இந்திய ரூபாய்களுக்கும், ககிஸோ றபாடாவை 10.75 கோடி இந்திய ரூபாய்களுக்கும் குஜராத் டைட்டான்ஸும் கைச்சாத்திட்டிருந்தது.
அவுஸ்திரேலியாவின் மார்க்கஸ் ஸ்டொய்னிஸை 11 கோடி இந்திய ரூபாய்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியிருந்தது.
ராஜஸ்தான் றோயல்ஸானது 12.5 கோடி இந்திய ரூபாய்களுக்கு ஜொஃப்ரா ஆர்ச்சரைக் கைச்சாத்திட்டிருந்தது.
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரானது ஜொஷ் ஹேசில்வூட்டை 12.5 கோடி இந்திய ரூபாய்களுக்கும், பில் ஸோல்டை 11.5 கோடி இந்திய ரூபாய்களுக்கும் வாங்கியிருந்தது.
சண்றைசர்ஸ் ஹைதரபாத்தானது 11.25 கோடி இந்திய ரூபாய்களுக்கு இஷன் கிஷனையும், 10 கோடி இந்திய ரூபாய்களுக்கு மொஹமட் ஷமியையும் கைச்சாத்திட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
21 Dec 2024