2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஐ.பி.எல்: ராஜஸ்தானின் அணித்தலைவராக ரியான் பராக்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 20 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2025ஆம் ஆண்டு பருவகாலத்தின் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் முதல் மூன்று போட்டிகளுக்கும் ரியான் பராக் தலைமை தாங்கவுள்ளார்.

விரல் காயமொன்றிலிருந்து வழமையான அணித்தலைவர் சஞ்சு சாம்சன் குணமடைந்து வருகையிலேயே ராஜஸ்தானுக்கு பராக் தலைமை தாங்கவுள்ளார்.

விக்கெட் காப்பு மற்றும் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கான அனுமதி சாம்சனுக்கு கிடைக்கும் வரையில் துடுப்பாட்டவீரராக மாத்திரம் செயற்படவுள்ளார்.

அந்தவகையில் தாக்கம் செலுத்தும் வீரராகவே சாம்சன் களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சன் இல்லாத நிலையில் துருவ் ஜுரேல் விக்கெட் காப்பில் ஈடுபடுவாரெனத் தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .