2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: பழைய பாதைக்கு திரும்புமா மும்பை இந்தியஸ்?

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 18 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸுடன் இணைந்து அதிக தடவைகளாக ஐந்து தடவைகள் சம்பியனாகியுள்ள மும்பை இந்தியன்ஸ் கடந்த பருவகாலத்தில் இறுதி இடத்தையே பெற்றது.

கடந்த பருவகாலத்தில் அணித்தலைவராக றோஹித் ஷர்மாவை ஹர்திக் பாண்டியா பிரதியிட்ட நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் அரங்கிலுள்ள, சமூகவலைத்தளங்களில் இரசிகர்களால் தூற்றப்பட்ட நிலையில் அணியில் சிக்கல் நிலவுகின்றதோ என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அதன் பின்னர் தன்னை இரண்டு சர்வதேச கிரிக்கெட் சபை தொடர்களிலும் தன்னை பாண்டியா நிரூபித்ததுடன், வீரர்களைத் தக்க வைத்ததிலும் உள்ளகச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டது போலத் தோன்றுகின்றது.

அந்தவகையில் ஜஸ்பிரிட் பும்ரா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, நாமன் திர் என தக்க வைக்கப்பட்ட இந்திய வீரர்களே மும்பையின் பலமாகக் காணப்படுகிறது.

பும்ரா எப்போது விளையாடுவாரென தெளிவில்லாத நிலையில் மீளக் கைச்சாத்திடப்பட்ட ட்ரெண்ட் போல்ட், தீபக் சஹர் ஆகியோர் இனிங்ஸின் ஆரம்பத்தில் மட்டுமல்லாமல் இறுதி ஓவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இஷன் கிஷன், டிம் டேவிட், நெஹால் வதேரா, அன்ஷுல் கம்போஜ்  ஆகியோர் இம்முறை இல்லாத நிலையில் றயான் றிக்கெல்டன், வில் ஜக்ஸ், மிற்செல் சான்ட்னெர், றீஸ் டொப்லி ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கக்கூடியவர்களாகக் காணப்படுகின்றனர்.

எதிர்பார்க்கப்படும் பதினொருவர் அணி: றோஹித் ஷர்மா, றயான் றிக்கெல்டன், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, நாமன் திர், ஹர்திக் பாண்டியா, ராஜ் பவா, மிற்செல் சான்ட்னெர், தீபக் சஹர், ட்ரெண்ட் போல்ட், கரண் ஷர்மா

தாக்கம் செலுத்தும் வீரர்கள்: வில் ஜக்ஸ், றீஸ் டொப்லி, முஜீப் உர் ரஹ்மான், றொபின் பின்ஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X