2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஐ.பி.எல்: டெல்லி கப்பிட்டல்ஸ்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 16 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) இதுவரையில் சம்பியனாயிருக்காத டெல்லி கப்பிட்டல் இம்முறை அதை மாற்றி எழுதும் நோக்கோடு களமிறங்குகின்றது.

கடந்த பருவகாலத்தில் அணித்தலைவராக இருந்த றிஷப் பண்டை தக்க வைக்காத டெல்லி, அக்ஸர் பட்டேலை இம்முறை அணித்தலைவராக்கியிருக்கிறது.

அன்றிச் நொர்கியா உள்ளிட்டோரை இழந்தாலும் மிற்செல் ஸ்டார்க், தங்கராசு நடராஜன், மோஹித் ஷர்மாவின் வருகையால் அக்ஸர், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் என கடந்த முறை பந்துவீச்சுக் கூட்டணி பலமாகியுள்ளது.

இது தவிர லோகேஷ் ராகுல், கருண் நாயர், பப் டு பிளெஸி, அஷுதோஷ் ஷர்மா, சமீர் றிஸ்வியின் வருகையும் அபிஷேக் பொரேல், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் பிறேஸர்-மக்குர்க் என துடுப்பாட்டக்கூட்டணியின் பலப்படுத்தியிருப்பதால் இம்முறை தகுதிகாண் போட்டிகளுக்கு டெல்லி முன்னேறும் என நம்பப்படுகிறது.

எதிர்பார்கப்படும் பதினொருவர்: லோகேஷ் ராகுல், ஜேக் பிறேஸர் மக்குர்க், பப் டு பிளெஸி, கருண் நாயர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் பொரேஸ், அக்ஸர் பட்டேல், மிற்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், தங்கராசு நடராஜன்

தாக்கம் செலுத்தும் வீரர்கள்: அஷுதோஷ் ஷர்மா, மோஹித் ஷர்மா, சமீர் றிஸ்வி, தர்ஷன் நல்கன்டே


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .