Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மார்ச் 16 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 18ஆவது பருவகாலமானது இவ்வாரம் ஆரம்பிக்கின்ற நிலையில், ஐ.பி.எல்லை அதிக தடவைகளாக மும்பை இந்தியன்ஸுடன் ஐந்து தடவைகள் கைப்பற்றியுள்ள சென்னை சுப்பர் கிங்ஸின் குழாமை இக்கட்டுரை நோக்குகின்றது.
கடந்த பருவகாலத்தில் ஓட்ட விகித வித்தியாசத்தில் தகுதிகாண் போட்டி வாய்ப்பை தவறவிட்டு ஐந்தாமிடத்தைப் பெற்ற சென்னை, கடந்த முறை குழாமிலிருந்து அஜின்கியா ரஹானே, சமீர் றிஸ்வி, மொயின் அலி, ராஜ்வர்தன் ஹங்ரேக்கர், டரைல் மிற்செல், மிற்செல் சான்ட்னெர், தீபக் சஹர், துஷார் தேஷபந்தே, முஸ்தபிசூர் ரஹ்மான், ஷர்துல் தாக்கூர், மகேஷ் தீக்ஷன ஆகியோரை இழந்திருக்கிறது. என்றபோதும் இரவிச்சந்திரன் அஷ்வின், நாதன் எலிஸ், கலீல் அஹ்மட், ராகுல் ட்ரிபாதி உள்ளிட்டோர் குழாமில் இடம்பெற்றிருப்பது பலத்தை வழங்குகின்றது.
அணித்தலைவர் ருத்துராஜ் கைகவாட் நிலையான ஓட்டக்குவிப்பை மேற்கொள்ள றஷின் றவீந்திர அதிரடியா அல்லது டெவோன் கொன்வேயின் ஓட்டக் குவிப்பா என்ற கேள்வி எழுகிறது. மறுபக்கமாக ராகுல் ட்ரிபாதி, விஜய் ஷங்கர், ஷிவம் டுபே மத்திய வரிசையைப் பலப்படுத்துவதோடு, இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின் சுழல் கூட்டணியிம், கலீல் அஹ்மட், நாதன் எலிஸ், மதீஷ பத்திரண போன்றோர் பந்துவீச்சுப் பக்கம் கலக்க காத்திருக்கின்றனர்.
மகேந்திர சிங் டோணியின் செயற்பாடானது கடந்த பருவகாலத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாத நிலையில் இதுவே அவரது இறுதி ஐ.பி.எல்லாக இருக்குமென்ற நிலையில் அவர் மீது அழுத்தம் காணப்படுகின்றது. அந்தவகையில் இறுதி நேரத்தில் வேகமாக ஓட்டங்களைப் பெறுவதற்கு தீபக் ஹூடா பயன்படுத்தப்படலாம். இது தவிர கிட்டத்தட்ட ஓவ்வொரு வீரர்களுக்கும் பிரதியீட்டு வீரர்களும் காணப்படுகின்றனர்.
எதிர்பார்க்கப்படும் பதினொருவர் அணி: ருத்துராஜ் கைகவாட் (அணித்தலைவர்), றஷின் றவீந்திர, டெவோன் கொன்வே, ராகுல் ட்ரிபாதி, ஷிவம் டுபே, மகேந்திர சிங் டோணி (விக்கெட் காப்பாளர்), இரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், இரவிச்சந்திரன் அஷ்வின், கலீல் அஹ்மட், மதீஷ பத்திரண
தாக்கம் செலுத்தும் வீரர்கள்: நாதன் எலிஸ், விஜய் ஷங்கர், ஷ்ரேயாஸ் கோபால், நூர் அஹ்மட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .