Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2025 மார்ச் 27 , பி.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் தற்போது நடைபெற்று வரும் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுக்கெதிரான போட்டியில் அவ்வணிக்கு 191 ஓட்டங்களை வெற்றியிலக்காக சண்றைசர்ஸ் ஹைதரபாத் நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சுப்பர் ஜையன்ட்ஸின் அணித்தலைவர் றிஷப் பண்ட், சண்றைசர்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சண்றைசர்ஸ், ஆரம்பத்திலேயே அபிஷேக் ஷர்மா, இஷன் கிஷனை அடுத்தடுத்த பந்துகளில் ஷர்துல் தாக்கூரிடம் இழந்தது.
பின்னர் ட்ரெவிஸ் ஹெட் வேகமாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பிறின்ஸ் யாதவ்விடம் 47 (28) ஓட்டங்களுடன் அவர் வீழ்ந்தார். அடுத்து வந்த ஹெய்ன்றிச் கிளாசெனும் வேகமாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில் எதிர்பாராதவிதமாக 26 (17) ஓட்டங்களுடன் ரண் அவுட்டானார். சிறிது நேரத்தில் நிதிஷ் குமார் ரெட்டியும் 32 (28) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அனிகெட் வெர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 36 (13) ஓட்டங்களுடன் டிக்வேஷ் ரதியிடம் ஆட்டமிழந்தார். இரண்டு பந்துகளிலேயே தாக்கூரிடம் அபினவ் மனோகர் வீழ்ந்தார். அணித்தலைவர் பற் கமின்ஸ் அதிரடியாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 18 (04) ஓட்டங்களுடன் ஆவேஷ் கானிடம் வீழ்ந்தார்.
தொடர்ந்து மொஹமட் ஷமியும் தாக்கூரிடம் விழ 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை சண்றைசர்ஸ் பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago