2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: சண்றைசர்சை வீழ்த்திய மும்பை

Shanmugan Murugavel   / 2024 மே 07 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மும்பையின் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சண்றைசர்ஸ், ட்ரெவிஸ் ஹெட் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றாலும் அபிஷேக் ஷர்மா, மாயங்க் அகர்வாலை ஜஸ்பிரிட் பும்ரா, அன்ஷுல் கம்போஜ்ஜிடம் இழந்தது. பின்னர் ஹெட் 48 (30) ஓட்டங்களுடனும், நிதிஷ் குமார் ரெட்டி 20 (15) ஓட்டங்களுடனும் அடுத்தடுத்த ஓவர்களில் பியூஸ் சாவ்லா, பாண்டியாவிடம் வீழ்ந்தனர்.

அடுத்து வந்த ஹென்றிச் கிளாசனும் அடுத்த ஓவரிலேயே சாவ்லாவிடம் வீழ்ந்ததோடு, சிறிது நேரத்தில் பாண்டியாவிடம் ஷபாஸ் அஹ்மட்டும், மார்கோ ஜன்சனும் வீழ்ந்தனர். வந்த அப்துல் சமட்டும் அடுத்த ஓவரிலேயே சாவ்லாவிடம் விழ, அணித்தலைவர் பற் கம்மின்ஸின் ஆட்டமிழக்காத 35 (17) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை சண்றைசர்ஸ் பெற்றது.

பதிலுக்கு 174 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை ஆரம்பத்திலேயே இஷன் கிஷன், றோஹித் ஷர்மா, நாமன் திர்ரை ஜன்சன், கம்மின்ஸ், புவ்னேஷ்வர் குமாரிடம் இழந்து தடுமாறியது.

எனினும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ்வின் ஆட்டமிழக்காத 102 (51), திலக் வர்மாவின் ஆட்டமிழக்காத 37 (32) ஓட்டங்களோடு 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக சூரியகுமார் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .