2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

ஐ.பி.எல் ஏலம்: வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கிராக்கி

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 26 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2025ஆம் ஆண்டுத் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் இரண்டாம் நாளில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மவுஸு காணப்பட்டிருந்தது.

10.75 கோடி இந்திய ரூபாய்களுக்கு புவ்னேஷ்வர் குமாரை றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வாங்கியிருந்ததுடன், 9.25 கோடி இந்திய ரூபாய்களுக்கு தீபக் சஹரை மும்பை இந்தியன்ஸ் வாங்கியிருந்ததுடன், 8 கோடி இந்திய ரூபாய்களுக்கு முகேஷ் குமாரை டெல்லி கப்பிட்டல்ஸ் வாங்கியிருந்தது. ஆகாஷ் டீப்பை 8 கோடி இந்திய ரூபாய்களுக்கு லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வாங்கியிருந்தது.

இந்நிலையில் 13 வயதான இந்தியாவின் வைபவ் சூரியவன்ஷியை 1.10 கோடி இந்திய ரூபாய்களுக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் கைச்சாத்திருந்தது.

இதேவேளை 1.60 கோடி இந்திய ரூபாய்களுக்கு இலங்கையின் நுவான் துஷாரவை றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வாங்கியிருந்தது.

இதுதவிர, இலங்கையில் இன்னும் அறிமுகத்தை மேற்கொள்ளாதன் எஷான் மலிங்கவை சண்றைசர்ஸ் ஹைதரபாத் 1.20 கோடி இந்திய ரூபாய்களுக்கு கைச்சாத்திட்டதுடன், கமிந்து மென்டிஸை 0.75 கோடி இந்திய ரூபாய்களுக்கும் கைச்சாத்திட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .