2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

ஐ.பி.எல்: அதிர்ச்சியளிக்குமா குஜராத் டைட்டான்ஸ்?

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 17 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) அறிமுகமான முதல் பருவகாலத்திலேயே சம்பியனான குஜராத் டைட்டான்ஸ், அடுத்த பருவகாலத்தில் இறுதிப் போட்டி வரையில் முன்னேறியிருந்த நிலையில் கடந்த பருவகாலத்தில் எட்டாமிடத்துக்கு கீழிறங்கியிருந்தது.

இந்நிலையில் கடந்த பருவகாலத்திலிருந்து அணித்தலைவர் ஷுப்மன் கில் மற்றும் ரஷீட் கான், சாய் சுதர்ஷன், ராகுல் டிவாட்டியா, ஷாருக் கான், சாய் கிஷோர்ஃப், ஜெயந்த் யாதவ்வை தக்க வைத்த குஜராத், ஜொஸ் பட்லர், ககிஸோ றபாடா, மொஹமட் சிராஜ், கிளென் பிலிப்ஸ், மொஹமட் சிராஜ், வொஷிங்டன் சுந்தர் ஆகியோரைக் கொண்டு பலமான நிலையில் காணப்படுகிறது.

ஆரம்ப வரிசையில் கில், பட்லரிடம் அதிரடியான நிலைத்த ஆரம்பத்தை தொடர சாய் சுதர்ஷன் காணப்படுகின்ற நிலையில் இறுதி ஓவர்களில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடுவதற்கு டிவாட்டியா, ரஷீட் கான் காணப்படுகின்ற நிலையில் மத்திய வரிசை பிரகாசித்தால் குஜராத் சம்பியனாவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஏனெனில், ரஷீட் கானுடன் றபாடா, கிஷோர், சிராஜ், பிரசீத் கிருஷ்ணா எனப் பலமான பந்துவீச்சு வரிசையும் காணப்படுகின்றது.

எதிர்பார்க்கப்படும் பதினொருவர் அணி: ஜொஸ் பட்லர், ஷுப்மன் கில் (அணித்தலைவர்), சாய் சுதர்ஷன், ஷாருக் கான், கிளென் பிலிப்ஸ், ராகுல் டெவாட்டியா, ரஷீட் கான், சாய் கிஷோர், ககிஸோ றபாடா, பிரசீத் கிருஷ்ணா, மொஹமட் சிராஜ்.

தாக்கம் செலுத்தும் வீரர்கள்: அனுஜ் ராவட், ஜெயந்த் யாதவ், ஷெர்ஃபேன் ருதஃபோர்ட், குல்வன்ட் கெஜ்ரோலியா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X