2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

ஐ.பி.எல்: 243 ஓட்டங்களைக் குவித்த பஞ்சாப்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 25 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் குஜராத் டைட்டான்ஸுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 243 ஓட்டங்களைக் குவித்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற டைட்டான்ஸின் அணித்தலைவர் ஷுப்மன் கில், பஞ்சாப்பை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்திருந்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப்பானது அறிமுக வீரர் பிரியன்ஷ் அர்யா மூலம் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் ககிஸோ றபாடாவிடம் பிரப்சிம்ரன் சிங் வீழ்ந்ததுடன் பின்னர் 47 (23) ஓட்டங்களுடன் ஆர்யாவும் வீழ்ந்தார். தொடர்ந்து அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் சாய் கிஷோரின் ஒரே ஓவரில் வீழ்ந்ததோடு. ஸ்டொய்னிஸும் கிஷோரிடம் வீழ்ந்தார்.

இந்நிலையில் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டமிழக்காத 97 (42), ஷஷாங்க் சிங்கின் ஆட்டமிழக்காத 44 (16) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை பஞ்சாப் பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X