2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்:18ஆவது முறையில் வெற்றியடையுமா பெங்களூரு?

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 20 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரமான விராட் கோலியைக் கொண்டிருந்தும் இந்தியன் பிறீமியர் லீக்கை (ஐ.பி.எல்) இதுவரையில் கைப்பற்றியிருக்காத றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு, லியனல் மெஸ்ஸி அறிமுகமாகி 17 ஆண்டுகளின் பின்னர் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியபோது கோலியின் சீருடை இலக்கமானது 18ஆவது ஆண்டில் கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்குகின்றது.

கடந்த முறை தகுதிகாண் போட்டிகளுக்குத் தகுதி பெற்றிருந்த பெங்களூரு அணித்தலைவர் பப் டு பிளெஸி மற்றும் மொஹமட் சிராஜ், கமரன் கிறீன், வில் ஜக்ஸ், கிளென் மக்ஸ்வெல், ஆகாஷ் டீப், லொக்கி பெர்கியூசன், அல்ஸாரி ஜோசப், றீஸ் டொப்லி, கரண் ஷர்மா ஆகியோரை விடுவித்ததுடன் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றிருந்தார்.

ரஜாட் பட்டிடாரை அணித்தலைவராக்கியிருக்கிற பெங்களூரு, பில் ஸோல்ட், தேவ்டுட் படிக்கல், ஜிதேஷ் ஷர்மா, ஜேக்கப் பெத்தெல், லியம் லிவிங்ஸ்டோன், றொமாரியோ ஷெப்பர்ட், குருனால் பாண்டியா, ஜொஷ் ஹேசில்வூட், புவ்னேஷ்வர் குமார், ரசில் சலாம்,  சுயாஷ் ஷர்மா என தகுந்த பிரதியீடுகளையும் ஏலத்தில் கொண்டிருக்கிறது.

பெங்களூரு மைதானத்தில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதே சிக்கலாக இருக்கின்ற நிலையில் புவ்னேஷ்வர் குமார், ரசிக் சலாம், சுயஷ் ஷர்மா, ஜொஷ் ஹேசில்வூட், குருனால் பாண்டியா ஆகியோர் அப்பணியை ஆற்றக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

தவிர ஆரம்பத்தில்  கோலியுடன் அதிரடியாக ஆட பில் ஸோல்டும் அதைத் தக்க வைக்க ஜிதேஷ் ஷர்மா, லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தெல் ஆகியோர் காணப்படுகின்றனர்.

எதிர்பார்க்கப்படும் பதினொருவர்: பில் ஸோல்ட், விராட் கோலி, ரஜாட் பட்டிடார், லியம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, ஜேக்கப் பெத்தெல், குருனால் பாண்டியா, புவ்னேஷ்வர் குமார், ரசிக் சலாம், ஜொஷ் ஹேசில்வூட், சுயஷ் ஷர்மா.

தாக்கம் செலுத்தும் வீரர்கள்: தேவ்டுட் படிக்கல், யஷ் தயால், றொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷார


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X