2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஐ. அமெரிக்காவை சுருட்டிய பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2024 மே 26 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டனில் சனிக்கிழமை (25) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐ. அமெரிக்கா, அன்ட்ரைஸ் கெளஸின் 27 (15) ஓட்டங்கள் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றபோதும் ஷகிப் அல் ஹஸன், முஸ்தபிசூர் ரஹ்மான் (6), தன்ஸிம் ஹஸன் சகிப், ரிஷாட் ஹொஸைனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 105 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், தன்ஸிட் ஹஸனின் ஆட்டமிழக்காத 58 (42), செளமியா சர்காரின் ஆட்டமிழக்காத 43 (28) ஓட்டங்களோடு 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் முஸ்தபிசூர் தெரிவானார்.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற ஐ. அமெரிக்கா, 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .