Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2024 மே 21 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்.பி.எல்) இவ்வாண்டுக்கான ஏலமானது செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றபோது ஜஃப்னா கிங்ஸ் அணியால் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் வீரரான மேர்வின் அபினாஷ், கொழும்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் வீரரான அருள் பிரகாசம் ஆகியோர் ஏலமெடுக்கப்பட்டனர்.
கிங்ஸால் ஏலத்துக்கு முன்னர் தக்க வைக்கப்பட்ட, கைச்சாத்திட்டவர்கள் பட்டியலில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றிருந்ததோடு, ஏலத்தின்போது கடந்த முறை ஏலமெடுக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முன்னாள் வீரரான தீஸன் விதுஷனும் ஏலமெடுக்கப்பட்டிருந்தார்.
ஏலத்தில் அதிக தொகைக்கு 120,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு கொழும்பு ஸ்ரைக்கர்ஸால் மதீஷ பத்திரண கைச்சாத்திடப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குஷல் பெரேரா உள்ளிட்டவர்கள் ஏலமெடுக்கப்படவில்லை.
குழாம்கள் ஏல முடிவில் பின்வருமாறு காணப்படுகின்றன. வீரர்களின் பெயரின் பின்னால் அடைப்புக்குறி இடப்பட்டவர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டதுடன், மற்றையவர்கள் ஏலத்துக்கு முன்னால் தக்க வைக்கப்பட்டதுடன், கைச்சாத்திடப்பட்டும் இருந்தார்கள்.
கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்: மதீஷ பத்திரண ($120,000), சாமிக கருணாரத்ன, திஸர பெரேரா, சதீர சமரவிக்கிரம, நிபுன் தனஞ்சய, ஷடாப் கான், கிளென் பிலிப்ஸ், சாமிக குணசேகர ($10,000), டுனித் வெல்லலாகே ($50,000), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் ($50,000), தஸ்கின் அஹ்மட் ($50,000), அஞ்சலோ பெரேரா ($20,000), ஷெவோன் டேனியல் ($15,000), கருக சங்கெத் ($20,000), ஷெகான் பெர்ணாண்டோ ($5,000), கவின் பண்டார ($5,000), இசித விஜேசுந்தர ($5,000), முஹமட் வஸீம் ($20,000), அல்லாஹ் கஸன்ஃபார் ($10,000)
தம்புள்ள தண்டர்ஸ்: டில்ஷான் மதுஷங்க, நுவான் துஷார, துஷான் ஹேமந்த, பிரவீன் ஜெயவிக்கிரம, முஸ்தபிசூர் ரஹ்மான், இப்ராஹிம் ஸட்ரான், லஹிரு உதார ($10,000), அகில தனஞ்சய ($20,000), தனுஷ்க குணதிலக ($22,000), இஃப்திஹார் அஹ்மட் ($50,000), நுவனிடு பெர்ணாண்டோ ($34,000), நுவான் பிரதீப் ($36,000), ரனேஷ் சில்வா ($5,000), சொஹான் டீ லிவெரா ($5,000), ஹஸ்மதுல்லாஹ் ஸஸாய் ($50,000), கரிம் ஜனட் ($80,000), அசேல குணரட்ண ($10,000), லஹிரு மதுஷங்க ($20,000), ருசந்த கமகே ($5,000), மிதுன் ஜயவிக்கிரம ($5,000), அயன சிரிவர்தன ($5,000), சொனால் டினுஷ ($6,000), ஹைதர் அலி ($25,000), சந்துஷ் குணதிலக ($6,000)
கோல் மார்வல்ஸ்: பானுக ராஜபக்ஷ, லசித் குறொஸ்புள்ளே, நிரோஷன் டிக்வெல்ல, மகேஷ் தீக்ஷன, டிம் செய்ஃபேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே ($36,000), டுவைன் பிறிட்டோறியஸ் ($30,000), சஹான் ஆராச்சிகே ($20,000), லஹிரு குமார ($30,000), பிரபாத் ஜெயசூரிய ($10,000), ஷோன் வில்லியம்ஸ் ($20,000), ஸஹூர் கான் ($10,000), மல்ஷா தருபதி ($25,000), சதிஷ ராஜபக்ஷ ($5,000), மொஹமட் ஷிராஸ் ($10,000), இசுரு உதான ($100,000), தனஞ்சய லக்ஷன் ($10,000), பசிந்து சூரியபண்டார ($5,000), கவிந்து நதீஷன் ($5,000), முஜீப் உர் ரஹ்மான் ($50,000), சமிந்த விஜேசிங்க ($5,000), ஜெஃப்ரி வன்டர்சே ($30,000), யூரி கொத்திகொட ($5,000)
ஜஃப்னா கிங்ஸ்: குசல் மென்டிஸ், அவிஷ்க பெர்ணாண்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய், நூர் அஹ்மட், றைலி றொஸோ ($60,000), பேபியன் அலென் ($32,000), தனஞ்சய டி சில்வா ($50,000), பிரமோத் மதுஷன் ($20,000), ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப் ($50,000), பினுர பெர்ணாண்டோ ($55,000), அசித பெர்ணாண்டோ ($40,000), விஷாட் ரந்திக ($5,000), லஹிரு சமரக்கோன் ($13,000), எஷான் மலிங்க ($5,000), அலெக்ஸ் றோஸ் ($20,000), அஹன் விக்ரமசிங்க ($5,000), வனுஜ சஹான் ($10,000), முர்வின் அபினாஷ் ($5,000), அருள் பிரகாசம் ($5,000), பதும் நிஸங்க ($40,000), நிஷான் மதுஷ்க ($10,000), தீசன் விதுஷன் ($5,000), நிசால தாரக ($5,000)
பி-லவ் கண்டி: வனிடு ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், துஷ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்ட்ரே பிளெட்சர், கைல் மேயர்ஸ், அஷேன் பண்டார ($28,000), தினேஷ் சந்திமால் ($40,000), தசுன் ஷானக ($85,000), ரமேஷ் மென்டிஸ் ($10,000), திமுத் கருணாரத்ன ($10,000), மொஹமட் ஹஸ்னைன் ($30,000), பவன் ரத்னாயக்கே ($5,000), சமத் கோமெஸ் ($5,000), சத்துரங்க டி சில்வா ($30,000), லக்ஷன் சந்தகன் ($20,000), கவிந்து பதிரத்னே ($5,000), சம்மு அஷான் ($5,000), அஸாம் கான் ($50,000), சல்மான் அலி அக்ஹா ($10,000), மொஹமட் அலி ($10,000), கசுன் ராஜித ($26,000)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
30 minute ago