2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

உதைபந்தாட்ட போட்டியில் சன் பேர்ட்ஸ் கழகம் வெற்றி

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மார்கஸ் தோட்டம்  மேல் பிரிவு பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தால் 17வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு ஏழு பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மார்கஸ் தோட்ட மேற்பிரிவு பொது மைதானத்தில் கடந்த 19, 20 ஆம் திகதிகளில் நடைபெற்றது. 
 
போட்டி தொடரில் 16 அணிகள் பங்குபற்றலுடன் நொக்கவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஸ்கிராப் தோட்டத்தை சேர்ந்த சன் பேர்ட்ஸ் விளையாட்டு கழகமும் மார்கஸ் தோட்ட மேற்பிரிவு தோட்டத்தை சேர்ந்த பிரண்ட்ஸ் விளையாட்டு கழகமும் பல பரீட்சை நடத்தியது. அதில் வழங்கப்பட்ட நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் போடாத நிலையில் தண்ட உதை வழங்கப்பட்டது.

இதில் மூன்றுக்கு ஒன்று 3:1 என்ற கோல் அடிப்படையில் சன் பேர்ட்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது. வெற்றி பெற்ற அணிக்கு கிண்ணமும்  40 ஆயிரம் ரூபாய் பண பரிசும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட அணிக்கு கிண்ணமும் 20 ஆயிரம் ரூபாய் பணம் பரிசும் வழங்கப்பட்டது.

 சிறந்த கோல் காப்பாளராக சன் பேர்ட்ஸ் விளையாட்டு கழகத்தின் எம். பவித்ரன் மற்றும் சிறந்த விளையாட்டு வீரராக பிரன்ஸ் விளையாட்டு கழகத்தின் அருள் தெரிவு செய்யப்பட்டனர்.

செ. திவாகர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .