2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கையை வீழ்த்துமா நியூசிலாந்து?

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 25 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது காலியில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வென்ற நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு இப்போட்டியின் முடிவானது இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் முக்கியமானதாகக் காணப்படுகிறது.

இருக்கின்ற ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் இலங்கை வென்றால் இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெறுமென்ற நிலையில் பிரபாத் ஜெயசூரிய, அறிமுக சுழற்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் ஆகியோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர். இதில் ரமேஷ் மென்டிஸை பீரிஸ் பிரதியிட்ட நிலையில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டியவராக உள்ளார்.

இதேவேளை இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய லஹிரு குமாரவையும் மிலான் ரத்னாயக்க பிரதியிட்டுள்ளார்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியில் மிற்செல் சான்ட்னெரை மிஷெல் பிறேஸ்வெல் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதுடன், அணித்தலைவர் டிம் செளதியை மற் ஹென்றி பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X