Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த தென்னாபிரிக்கா, கஹபெஹாவில் வியாழக்கிழமை (05) ஆரம்பித்து திங்கட்கிழமை (09) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியை வென்றமையைடுத்தே 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, கைல் வெரைனின் ஆட்டமிழக்காத 105, றயான் றிக்கெல்டனின் 101, அணித்தலைவர் தெம்பா பவுமாவின் 78 ஓட்டங்களை சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 358 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், லஹிரு குமார 4, அசித பெர்ணாண்டோ 3, விஷ்வ பெர்ணாண்டோ 2, பிரபாத் ஜெயசூரிய ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, பதும் நிஸங்கவின் 89, கமிந்து மென்டிஸின் 48, அஞ்சலோ மத்தியூஸின் 44, தினேஷ் சந்திமாலின் 44 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், டேன் பற்றர்சன் 5, கேஷவ் மஹராஜ் 2, மார்கோ ஜன்சன் 2, ககிஸோ றபாடா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, பவுமாவின் 66, ஏய்டன் மார்க்ரமின் 55, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் 47, டேவிட் பெடிங்ஹாமின் 35 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், பிரபாத் ஜெயசூரியா 5, விஷ்வ பெர்ணாண்டோ 2, அசித பெர்ணாண்டோ 1, குமார 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அந்தவகையில் 348 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவின் 50, குசல் மென்டிஸின் 46, கமிந்து மென்டிஸின் 35, மத்தியூஸின் 32, சந்திமாலின் 29 ஓட்டங்களோடு வெற்றியிலக்கை நோக்கிப் பயணித்தபோதும் கேஷவ் மஹராஜ் (5), பற்றர்சன் (2), றபாடா (2), ஜன்சனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களையே பெற்று 109 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பற்றர்சன், தொடரின் நாயகனாக பவுமா ஆகியோர் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago