2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை

இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 09 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற அவுஸ்திரேலியா, காலியில் வியாழக்கிழமை (06) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (09) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, நேதன் லையன் (3), ட்ரெவிஸ் ஹெட், மிற்செல் ஸ்டார்க் (3), மத்தியூ கூனுமென்னிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 257 ஓட்டங்களையே பெற்றது. குசல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 85, தினேஷ் சந்திமால் 74, திமுத் கருணாரத்ன 36, ரமேஷ் மென்டிஸ் 28 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, அலெக்ஸ் காரியின் 156, அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தின் 131, உஸ்மான் கவாஜாவின் 36, பியூ வெப்ஸ்டரின் 31 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 414 ஓட்டங்களைப் பெற்றது. பிரபாத் ஜெயசூரிய 5, நிஷான் பீரிஸ் 3, ரமேஷ் மென்டிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, மத்தியூ குனுமென் (4), நேதன் லையன் (4), பியூ வெப்ஸ்டரிடம் (2) விக்கெட்டுகளை பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களையே பெற்றது. அஞ்சலோ மத்தியூஸ் 76, குசல் மென்டிஸ் 50 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு 75 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, பிரபாத் ஜெயசூரியவிடன் ட்ரெவிஸ் ஹெட்டை 20 ஓட்டங்களுடன் இழந்தபோதும், உஸ்மான் கவாஜாவின் ஆட்டமிழக்காத 27, மர்னுஸ் லபுஷைனின் ஆட்டமிழக்காத 26 ஓட்டங்களோடு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக காரியும், தொடரின் நாயகனாக ஸ்மித்தும் தெரிவாகினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X