2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இலங்கைக்கெதிராக ஷொரிஃபுல் விளையாடுவது சந்தேகம்

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 04 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பங்களாதேஷின் ஆரம்பப் போட்டியான இலங்கைக்கெதிரான போட்டியில் அதன் வேகப்பந்துவீச்சாளர் ஷொரிஃபுல் இஸ்லாம் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

இந்தியாவுக்கெதிரான போட்டியின்போது பந்து கையைத் தாக்கியதில் ஷொரிஃபுல்லி இடதுகையின் சுட்டு விரலுக்கும், நடு விரலுக்குமிடையிலான பகுதியில் கிழிவு ஏற்பட்டு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளன.

அந்தவகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) நடைபெறவுள்ள குறித்த போட்டியில் ஷொரிஃபுல் விளையாடுவது குறித்து அறிந்து கொள்ள இரண்டு நாள்கள் பங்களாதேஷ் காத்திருக்க வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .