2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை

இலங்கை கிரிக்கெட் சபையுடன் பிரச்சினையில் ஷானக

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான ஐ.எல்.டி20-இன் டுபாய் கப்பிட்டல்ஸுக்காக இம்மாதம் இரண்டாம் திகதி விளையாடும் பொருட்டு கொழும்பில் முதற்தரப் போட்டியொன்றிலிருந்து அன்று சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக இலங்கையணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக வெளியேறியது தொடர்பாக விசாரணையொன்றை இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தவுள்ளது.

ஷானக தலைச்சுற்றொன்றைக் கொண்டிருந்ததாக முதற்தரப் போட்டியின் மத்தியஸ்தர் நம்பியதாகக் குறிப்பிடப்பட்டதும் கிரிக்கெட் சபையின் குற்றச்சாட்டுப்பத்திரத்தில் உள்ளடங்கியுள்ளது.

எவ்வாறாயினும் முதற்தரப் போட்டியை விட்டு தான் முன்னரே வெளியேறுவேன் என சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டி சில்வாவும், ஏனையோரும் முன்னரே அறிந்திருந்ததாக ஷானக கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X