Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 நவம்பர் 16 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் பதவியிலிருந்து பாபர் அஸாம் இராஜினாமா செய்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அணித்தலைவர் பதவியில் தொடர அஸாமுக்குத் தெரிவொன்று வழங்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்திருந்த நிலையில், அனைத்து வகையான போட்டிகளின் அணித்தலைவர் பதவியிலிருந்தும் அஸாம் இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக ஷகீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவராக ஷண் மசூட்டையும் பாகிஸ்தான் நியமித்துள்ளது.
பாகிஸ்தான் அணியில் உள்ளே வருவதும் போவதுமாகவுள்ள மசூட் அவ்வளவாக பெறுபேறுகளை பெறாத மசூட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையானது பேசுபொருளாகக் காணப்படுகிறது.
இதேவேளை, அணியின் இயக்குநராக பாகிஸ்தானின் முன்னாள் வீரர் மொஹமட் ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தலைமைப் பயிற்றுவிப்பாளராக யுனிஸ் கான் நியமிக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago