2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் பங்களாதேஷ் காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வென்ற நிலையில், ஜமைக்காவில் சனிக்கிழமை (30) ஆரம்பித்த இப்போட்டியின் மூன்றாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் நஹிட் ரானா (4), தஸ்கின் அஹ்மட், தஜியுல் இஸ்லாம், ஹஸன் மஹ்மூட் (2), அணித்தலைவர் மெஹிடி ஹஸன் மிராஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் கேசி கார்ட்டி 40, அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட் 39 ஓட்டங்களைப் பெற்றனர்.

இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் ஜாகிர் அலி 29 ஓட்டங்களுடனும், தஜியுல் இஸ்லாம் ஒன்பது ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். முன்னதாக ஷட்மன் இஸ்லாம் 46, மெஹிடி ஹஸன் 42, ஷடாட் ஹொஸைன் 28, லிட்டன் தாஸ் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஷாமர் ஜோசப் 2 மற்றும் ஜஸ்டின் கிறேவ்ஸ், அல்ஸாரி ஜோசப், ஜேடன் சியல்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .