2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ஹரி ப்றூக்

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஹரி ப்றூக் முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் 171 ஓட்டங்களைப் பெற்றதையடுத்தே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் 183 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் தெம்பா பவுமா, 24ஆம் இடத்திலிருந்து 14 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜோ றூட், 2. ஹரி ப்றூக், 3. கேன் வில்லியம்சன், 4. யஷஸ்வி ஜைஸ்வால், 5. டரைல் மிற்செல், 6. றிஷப் பண்ட், 7. கமிந்து மென்டிஸ், 8. ஸ்டீவன் ஸ்மித், 9. செளட் ஷகீல், 10. தெம்பா பவுமா.

இந்நிலையில் இலங்கைக்கெதிரான குறித்த டெஸ்டில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் மார்கோ ஜன்சன், பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 28ஆம் இடத்திலிருந்து 19 இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. ககிஸோ றபாடா, 3. ஜொஷ் ஹேசில்வூட், 4. இரவிச்சந்திரன் அஷ்வின், 5. பற் கமின்ஸ், 6. இரவீந்திர ஜடேஜா, 7. நேதன் லையன், 8. பிரபாத் ஜெயசூரிய, 9. மார்கோ ஜன்சன், 10. மற் ஹென்றி.

இதேவேளை சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையிலும் 12ஆம் இடத்திலிருந்து 10 இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை ஜன்சன் அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. இரவீந்திர ஜடேஜா, 2. மார்கோ ஜன்சன், 3. இரவிச்சந்திரன் அஷ்வின், 4. ஷகிப் அல் ஹஸன், மெஹிடி ஹஸன்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .