2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

இம்முறையாவது ஜொலிக்குமா பஞ்சாப் கிங்ஸ்?

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 19 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) கடந்த பருவகாலத்தில் ஒன்பதாவது இடத்தையே பெற்றிருந்த பஞ்சாப் கிங்ஸ், இறுதியாக 10 ஆண்டுகளுக்கு முன்னரே தகுதிகாண் போட்டிகளுக்குத் தகுதி பெற்றிருந்தது.

அந்தவகையில் ஷஷாங்க் சிங், பிரப்ஸிம்ரன் சிங்கை மாத்திரமே கடந்த பருவகாலத்திலிருந்து தக்க வைத்த பஞ்சாப், அர்ஷ்தீப் சிங்கை ஏலத்தில் வாங்கியிருந்தது.

அணித்தலைவராக கடந்த முறை கிண்ணத்தை வென்ற ஷ்ரேயாஸ் ஐயரைக் கொண்டு வந்து மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மக்ஸ்வெல், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்டோரை ஏலத்தில் வாங்கியிருந்தனர்.

ஜொஷ் இங்லிஷ், பிரப்ஸிம்ரன் சிங் ஆகியோரே பெரும்பாலும் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாகக் களமிறங்குவரென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஏனைய அணிகளைப் போல ஆரம்பம் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை.

எனவே ஐயர், ஸ்டொய்னிஸ், மக்ஸ்வெல், நெஹால் வதேரா, ஷஷாங் சிங் ஆகியோரை உள்ளிட்ட மத்தியவரிசையே பெரும்பணியாற்ற வேண்டியுள்ளது.

புதிய பந்தில் அர்ஷ்டீப் சிங்குடன் மார்கோ ஜன்சன் பலமாக இருக்கின்ற நிலையில் சஹால், ஹர்பிறீட் பிரார் கூட்டணி விக்கெட்டுகளைக் கைப்பற்றலாம். ஐந்தாவது பந்துவீச்சாளராக விஜயகுமார் வைஷாக்கும் இல்லாவிடின் குல்தீப் சென், யஷ் தாக்கூர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

எதிர்பார்க்கப்படும் பதினொருவர் அணி: பிரப்ஸிம்ரன் சிங், ஜொஷ் இங்லிஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (அணித்தலைவர்), ஷஷாங்க் சிங், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மக்ஸ்வெல், நெஹால் வதேரா, மார்கோ ஜன்சன், ஹர்பிறீட் பிறார், விஜயகுமார் வைஷாக், அர்ஷ்டீப் சிங்க்.
தாக்கம் செலுத்தும் வீரர்கள்: யுஸ்வேந்திர சஹால், யஷ் தாக்கூர், ப்ரியன்ஷ் ஆர்யா, சுர்யன்ஷ் ஷெட்ஜே


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X