Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், இரண்டாவது போட்டியில் இலங்கை வென்ற நிலையில் தொடரைச் சமப்படுத்துவதற்கு இப்போட்டியில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையிலுள்ளது.
அணித்தலைவர் றோஹித் ஷர்மா தவிர ஏனைய துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் மிகவும் மேம்பட்ட நிலையில் ஆடினாலே வெற்றி சாத்தியமாகலாம். குறிப்பாக விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோரிடமிருந்து நீண்ட இனிங்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இத்தொடரில் இன்னும் விளையாடாத றிஷப் பண்ட், ரியான் பராக், ஹர்ஷித் ரானா, கலீல் அஹ்மட் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
இலங்கையணியில் மாற்றமெதுவும் இருக்காதென நம்பப்படுகிறது.
47 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025