2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 21 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது மிர்பூரில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரே ஷகில் அல் ஹஸன் இல்லாமல் பங்களாதேஷ் களமிறங்கப் போகும் முதலாவது தொடராக அமைக்கின்ற நிலையில் ஷகிப்பின் பாரிய இடைவெளியை நிரப்ப வேண்டிய பொறுப்பு மெஹிடி ஹஸன் மிராஸுக்கு காணப்படுகின்றது.

மிர்பூர் ஆடுகளமானது சுழற்பந்துவீச்சுக்கே சாதகமானதாக காணப்படுமென்ற நிலையில் தஜியுல் இஸ்லாம், நயீம் ஹஸன் ஆகியோர் மெஹிடியுடன் களமிறங்குவரென எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாபிரிக்காவைப் பொறுத்த வரையில் அவ்வணியின் தலைவர் ஏய்டன் மார்க்ரமிலே பாரிய பொறுப்பு காணப்படுவதுடன், டெவால்ட் பிறெவிஸ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர கேஷவ் மஹராஜ்ஜுடன், டேன் பீடிட்டும், செனுரன் முத்துசாமியும் ககிஸோ றபாடா, வியான் முல்டர் பந்துவீச்சு வரிசைப் பூர்த்தி செய்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X