Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 19 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரானது கராச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான குழு ஏ போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
முதல் எட்டு நிலை அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் குழு ஏயின் பாகிஸ்தான், நியூசிலாந்து தவிர இந்தியா, பங்களாதேஷ் ஆகியனவும் குழு பியில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகியன காணப்படுகின்றன.
ஒவ்வொரு குழுவிலும் ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் ஒவ்வொரு போட்டியில் விளையாடி முடிவில் குழுவில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்தியாவின் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயிலும், ஏனைய போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன.
ஒருபோதுமில்லாதளவுக்கு குறிப்பிட்டு ஒரு அணிக்கு வாய்ப்புகள் அதிகமாக உண்டு என்று சொல்ல முடியாத தொடராக இத்தொடர் காணப்படுகின்றது.
இந்தியாவில் ஜஸ்பிரிட் பும்ரா இல்லாததோடு, மொஹமட் ஷமி இப்போதுதான் அணிக்குத் திரும்பியுள்ளார். அவுஸ்திரேலியாவில் மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், அணித்தலைவர் பற் கமின்ஸ், மிற்செல் மார்ஷ், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் இல்லை.
பாகிஸ்தானின் பந்துவீச்சு மற்றும் பின் மத்தியவரிசை சோடை போயுள்ளது. இங்கிலாந்து போர்ம் அவுட்டில் உள்ளது. தென்னாபிரிக்காவின் பெறுபேறுகளும் அண்மைக்காலமாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மோசமானதாகக் காணப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் மத்திய வரிசை சொல்லிக் கொள்ளும்படி இல்லாததுடன், பங்களாதேஷின் சுழற்பந்துவீச்சு பின்தங்கியுள்ளது. இருப்பதில் நியூசிலாந்தே அதிக வாய்ப்புள்ள அணியாகக் காணப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
4 hours ago