2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

இந்தியாவுக்கு சவாலளிக்குமா பங்களாதேஷ்?

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 09 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது டெல்லியில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய பங்களாதேஷ் அனைத்து துறைகளிலும் பாரியளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

முதலாவது போட்டியில் ஓட்டங்களை வாரி வழங்கிய தஸ்கின் அஹ்மட்டை தன்ஸிம் ஹஸன் சகிப் இப்போட்டியில் பிரதியிடலாமென எதிர்பார்க்கப்படுவதோடு, முஸ்தபிசூர் ரஹ்மானுக்குப் பதிலாக மஹெடி ஹஸன் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. தவிர மெஹிடி ஹஸன் மிராஸ் நான்காம், ஐந்தாமிடங்களில் களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கத்தில் இந்திய அணியில் எதுவித மாற்றமும் இருக்காதெனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .