Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2023 மே 28 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுடன் பலப்பரீட்சையை இன்று (28) இரவு 7.30 மணிக்கு நடத்துகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “2 சிறந்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ், 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளேஆஃப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள். ஆறாவது இரவு என்று நம்புகிறேன். இது ஒரு அற்புதமான பயணம். இன்றிரவு நடக்கும் இறுதிப் போட்டியே ஐபிஎல் தொடர்களில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த சிறந்த டோர்னமென்ட்டில் ஆடியதை நான் மிகவும் ரசித்தேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. இனி யூடர்ன் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
ராயுடு 2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார் மற்றும் 2017 சீசன் வரை அந்த அணிக்காக விளையாடினார். பின்னர் 2018ஆம் ஆண்டு CSK அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அந்த ஆண்டில் அவர் 16 இன்னிங்ஸ்களில் 43 சராசரியுடன் 602 ரன்கள் எடுத்தார். அதே சீசனில் தனது 100வது நாட் அவுட்டையும் பதிவு செய்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago