2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 06 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ஓவலில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே தோற்றுள்ள இலங்கை, இப்போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு துடுப்பாட்டத்தில் பாரியளவு முன்னேறத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் உள்ளிட்டோரிடமிருந்து பெரிய இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தவிர தொடரில் இலங்கையின் சிறந்த துடுப்பாட்டவீரராகக் காணப்படும் கமிந்து மென்டிஸை முன்வரிசையில் ஆட வைக்க வேண்டுமென்ற குரல்களும் காணப்படுகின்றன.

இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய நிஷான் மதுஷ்க, பிரபாத் ஜெயசூரியவை குசல் மென்டிஸ், விஷ்வ பெர்ணாண்டோ ஆகியோர் பிரதியிட்டுள்ளனர். இங்கிலாந்து சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய மத்தியூ பொட்ஸை அறிமுக இடதுகை இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹல் பிரதியிடுகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X