Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 14 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பல்லேகலவில் இன்று (14) நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற இலங்கை தொடரை ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஷெவோன் டானியல், சகலதுறைவீரர்கள் சஹான் ஆராச்சிகே, சாமிக கருணாரத்ன, டுனித் வெல்லலாகே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாமென
எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கமாக ஆப்கானிஸ்தான் அணியில் துடுப்பாட்டவீரர் றியாஸ் ஹஸன், வேகப்பந்துவீச்சாளர் நவீட் ஸட்ரான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுமெனக் கூறப்படுகிறது.
முதலிரண்டு போட்டிகளிலும் ஒரு கட்டத்தில் இலங்கைக்கு சவால் விடுமளவுக்கு ஆப்கானிஸ்தான் இருந்த நிலையில் அவ்வணியிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago