2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

ஆர்ஜென்டீனக் குழாமில் மார்டினெஸும் இல்லை

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 20 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


உருகுவே, பிரேஸிலுக்கெதிரான 2026 சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன தகுதிகாண் போட்டிகளை கெண்டைக்கால் பின்தசை காயம் காரணமாக ஆர்ஜென்டீனாவின் முன்களவீரர் லொட்டரோ மார்டினெஸ் தவறவிடவுள்ளதாக ஆர்ஜென்டீனா கால்பந்தாட்டச் சங்கம் புதன்கிழமை (19) தெரிவித்துள்ளது.

அணித்தலைவர் லியனல் மெஸ்ஸி, போலோ டிபாலா, ஜியோவனி லோ செல்ஸோ ஆகியோருடம் மார்டினெஸுடன் காயம் காரணமாக இப்போட்டிகளைத் தவறவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் நடைபெற்ற 12 தகுதிகாண் போட்டிகள் முடிவில் 25 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் வரிசையில் ஆர்ஜென்டீனா உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X